Wednesday, July 16, 2008

ராதேஷ் - காலை kadhir

இன்று ராதேஷ் காலை கதிரில் முதல் பக்கத்தில் தோன்றினான். ராதேஷ்க்கு ஒரே மகிழ்ச்சி. அரசு இசை பள்ளிக்கு போன போது புல்லாங்குழல் கட்ற்றுகொள்ளதான் அங்கே போனோம். ஆனால் அவனுக்கு தவில் வாத்தியார் நன்றாக தவில் வாசித்து காண்பிக்க, அதிலேயே அவன் சேர்ந்து கொண்டான். பள்ளியின் தலைமை ஆசிரியை மிகவும் அன்புடன் நடத்தியது அவனை மிகவும் கவர்ந்து விட்டது.

மேலும் இந்தியாவில் உள்ள எல்லா அரசு நிறுவனங்களும் எல்லார்க்கும் அணுக கூடிய அளவில் உள்ளன. இப்பள்ளியில் செலவு ரூ. 152. இது ஒரு வருசத்துக்கு! இப்போ பல இடங்களில் லட்ச கணக்கில் காசு கேட்கும் நிலையில் இது இசைக்கான மிகப் பெரிய சேவையே. இது தான் எனக்கு இந்தியாவில் பிடிததது. இதனாலே என்னை போன்ற பல ஏழை மாணவர்கள் படித்து முன்னேற முடிந்தது.
வாழ்க இந்த நிலை. வளர்க எல்லோரும்.

No comments: